×

நடிக்க வருகிறார் ரவீனா டண்டன் மகள் ராஷா

மும்பை: ரவீனா டண்டனின் மகள் ராஷா ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமாக உள்ளார். ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீனா டண்டன். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கேஜிஎஃப் 2 படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். இவருக்கு 3 மகள்கள். இதில் மூத்த மகள் ராஷா நடிக்க வருகிறார். பாலிவுட்டில் அறிமுகமாகும் அதே சமயத்தில் டோலிவுட்டில் உருவாகும் பான் இந்தியா படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இதில் ராம்சரண் ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் நடிக்கும் பான் இந்தியா படத்தில் ராஷா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம். இது பற்றி ரவீனா கூறும்போது, ‘ராஷாவுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன். அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் படிப்பு பாதிக்காத வகையில் சினிமாவிலும் நடிப்பாள். அது அவளது விருப்பம்’ என்றார்.

The post நடிக்க வருகிறார் ரவீனா டண்டன் மகள் ராஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Raveena Dandon ,Rasha ,Mumbai ,Kamal Haasan ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு