×

ஜவளகிரியில் வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மும்முரம்

தேன்கனிக்கோட்டை: கோடை காலம் துவங்கியுள்ளதால், தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க, தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள ஜவளகிரி வனச்சரகத்தில், யானை உள்ளிட்ட வனவிலங்குகள், தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி செல்கின்றன. இதை தடுக்க ஜவளகிரி வனப்பகுதியில் 5 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜவளகிரி வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர்கள் ஈஸ்வரன், செல்வராஜ் ஆகியோர் தண்ணீர் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை ஓசூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர் நிரப்பிய தொட்டிகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post ஜவளகிரியில் வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Javalagiri forest ,Thalu ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...