×

சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலர்: ராஜமவுலி, தனுஷ் வெளியிட்டனர்

சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்த அவர், இப்போது தனுஷுடன் இணைந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சிவராஜ் குமார் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கோஸ்ட்’. ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை கதை எழுதி ஸ்ரீனி இயக்கியுள்ளார். சந்தோஷ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் நாகராஜ் வழங்க, சந்தேஷ்.என் தயாரித்துள்ளார். இது அவர் தயாரித்துள்ள 31வது படமாகும். தசரா பண்டிகையையொட்டி வரும் 19ம் தேதி கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்துக்காக, தமிழ்ப் பதிப்புக்கு சிவராஜ் குமார் டப்பிங் பேசியுள்ளார்.

‘கோஸ்ட்’ படத்துக்கான டிரைலரின் தெலுங்கு பதிப்பை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், தமிழ்ப் பதிப்பை தனுஷும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். பாலிவுட் விநியோகஸ்தர் ஜெயந்திலால் கடா, பென் மூவிஸ் சார்பில் இப்படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார். மஸ்தி, பிரசன்னா வி.எம் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். அர்ஜூன் ஜென்யா இசை அமைக்க, மகேந்திர சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவராஜ் குமார், அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயணன், அர்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ், தட்டன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.

The post சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலர்: ராஜமவுலி, தனுஷ் வெளியிட்டனர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shivraj Kumar ,Rajamouli ,Chennai ,Rajinikanth ,Dhanush ,Shivraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...