×

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து: இந்திய அணி 4-ம் இடம்

சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578, இந்தியா 337 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்கள் எடுத்தது. பின், 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்து, 381 ரன்கள் பின்தங்கி இருந்தது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் இறுதி போட்டியில் விளையாட இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தொடரின் முடிவை பொறுத்தே இறுதி போட்டியில் விளையாடும் மற்றொரு அணி எது என்பது உறுதியாகும். இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி முதல் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 2-ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 3-ம் இடத்திலும், இந்தியா 4-ம் இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகள் ஆறு வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளது. இந்திய அணி இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கவனத்துடன் விளையாட வேண்டும். அதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதை உறுதிப்படுத்தலாம் என கூறப்படுகிறது. …

The post ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து: இந்திய அணி 4-ம் இடம் appeared first on Dinakaran.

Tags : ICC Test Championship ,England ,Indian ,Chennai ,Chennai Test match ,India ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை