×

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு

இந்திய இருப்புப்பாதைப் பொறியாளர்கள் நிறுவனம் (The Institution of Permanent Way Engineers (India)) இந்திய தொடர்வண்டி அமைச்சகத்தின் (Ministry  of Indian Railways) தொழில்நுட்பச் சார்பு நிறுவனமாக புதுடெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அஞ்சல் வழியில் இரண்டு பருவங்களைக்  (Semester) கொண்ட ஓராண்டு கால அளவிலான தொடர்வண்டிப் பொறியியலுக்கான பட்டயப்படிப்பு (Diploma in Railway Engineering) ஒன்றினை  நடத்திவருகிறது. இந்தப் பட்டயப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். தகுதிகள்: இந்திய இருப்புப்பாதைகளில் பணிபுரிந்துவரும் பணியாளர்கள், கொங்கன் இருப்புப்பாதை, துறைமுக இருப்புப்பாதை போன்ற பல்வேறு  இருப்புப்பாதை தொடர்புடைய அமைப்புகளில் பணிபுரிந்துவரும் பணியாளர்கள் மற்றும் இதர பொது நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும்  இருப்புப்பாதைகளில் பணிபுரிந்துவருபவர்கள் ஆகியோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல்  பாடங்களுடன் தேர்ச்சி பெற்று, இருப்புப்பாதைப் பணிகளில் மூன்று வருடங்களுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது  மூன்றாண்டு கால அளவிலான பொறியியல் பட்டயம் (Diploma in Engineering) அல்லது அறிவியல் / பொறியியல் பட்டம் (Degree in Science or  Engineering) அல்லது +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்துப் பின்னர் வேறு ஏதாவதொரு  பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். இருப்புப்பாதை பணியில் இல்லாதவர்கள் மேற்காணும் தகுதியில் முதல் தகுதியைத் தவிர்த்துப் பிற  தகுதிகளைக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.படிப்பின் பயன்கள்: இருப்புப்பாதைகளில் பணிபுரிபவர்களுக்கான, இந்திய இருப்புப்பாதை சி – நிலைப் (C-Category) பணிகளுக்கான பணி உயர்வுகளில் இந்தப் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுபோன்று, இந்திய இருப்புப்பாதைப் பணிகளுக்கு  விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்தப் பட்டயப்படிப்பு கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ipweindia.org.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம்  செய்து இருப்புப்பாதைப் பணியாளர்கள் ₹2510/-, மற்ற விண்ணப்பதாரர்கள் ₹3100 ‘Institution of Permanent Way Engineers (India),  New Delhi’ எனும்  பெயரில் டெல்லியில் மாற்றக்கூடியதான வங்கி வரைவோலை (Demand Draft) இணைத்து The Institution of Permanent Way Engineers (IPWE) India, Room No.109, North Central Railway Project Unit Building, Behind Shankar Market, New  Delhi-110 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இப்பட்டயப் படிப்பு குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.ipweindia.org.in எனும் இணைய தளத்தைப் பார்க்கலாம் அல்லது 011-23411419 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் தகவல்களைப்பெறலாம்….

The post அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு appeared first on Dinakaran.

Tags : Institution of Permanent Way Engineers ,India ,Indian Ministry of Railways ,Ministry ,Dinakaran ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...