×

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து படமாகிறது

லாஸ் ஏஞ்சல்ஸ்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில், திடீரென்று பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்க்க, ‘டைட்டன்’ என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், கடந்த ஜூன் மாதம் சென்றது. இதில் 5 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பேரழுத்தம் காரணமாக நீர்மூழ்கி சுற்றுலா வாகனம் உடைந்ததில், அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகும் என்றும், இதை ஜேம்ஸ் கேமரூன் இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், இத்தகவலை ஜேம்ஸ் கேமரூன் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், இச்சம்பவத்தை மைண்ட்ரியாட் என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாக்க இருப்பதாக கூறியுள்ளது. ‘சால்வேஜ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்ட இதை, ‘தி பிளாக்கெனிங்’ என்ற படத்தை தயாரித்த பிரையன் டாபின்ஸ் இணைந்து தயாரிக்கிறார். ஜஸ்டின் மேக்ரிகோர், ஜோனதன் கீசே இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். இப்படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

The post டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து படமாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Los Angeles ,North Atlantic Ocean ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலிவுட்டில் எனது இருண்ட காலம்: பிரியங்கா சோப்ரா பிளாஷ்பேக்