×

சுந்தர்.சிக்கு வில்லனான அனுராக் கஷ்யப்

சென்னை: 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கே. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.சி ஹீரோவாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் படம் ‘ஒன் 2 ஒன்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் சுந்தர்.சி நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, அனுராக் கஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் நீது சந்த்ரா, ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

The post சுந்தர்.சிக்கு வில்லனான அனுராக் கஷ்யப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anurag Kashyap ,Sundar.C. ,Chennai ,24 Hours Productions ,K. Written ,Thirungnanam ,Sundar C ,Bollywood ,Sundar.C ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...