×

மேட்டூர் அருகே தண்ணீர் தேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து ஆண் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் போராடி உடல் மீட்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நீதிபுரத்தில் சென்னம்பட்டி வனச்சரகம் உள்ளது. இங்கிருந்து உணவு, தண்ணீர் தேடி வெளியேறும் யானைகள், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை மற்றும் தக்காளி போன்ற பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, தண்ணீர் தேடி நீதிபுரம் கிராமத்திற்குள் வந்துள்ளது. அங்குள்ள தரைமட்ட விவசாய கிணற்றில், அந்த யானை தவறி விழுந்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த யானை, பரிதாபமாக உயிரிழந்தது. யானையின் பிளிறல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து மேட்டூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால், யானையின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மின்மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது. பின்னர், மேட்டூர் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி, யானையின் உடலில் கயிறு கட்டி, கிரேன் மூலம் மேலே கொண்டு வந்தனர். சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பிற்பகல் 3 மணியளவில் யானையின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர், கால்நடை மருத்துவர் அரங்கநாதன், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். கிராம மக்கள், யானையின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த யானை, நீதிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஓராண்டாக பயிர்களை சேதப்படுத்திய யானை இல்லை என்றும், இது அப்பகுதிக்கு புதிதாக வந்த யானை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post மேட்டூர் அருகே தண்ணீர் தேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து ஆண் யானை உயிரிழப்பு: 10 மணி நேரம் போராடி உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem District ,Kolathur Panchayat Union ,Neethipuram ,Chennampatti Forest Reserve ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் செத்து மிதக்கும்...