×

திருமணமாகி 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

குன்றத்தூர்: திருமணமான ஐந்து மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், இந்திராநகரை சேர்ந்தவர் பவித்ரா (27). அதே பகுதியில் தனது தாய்க்கு உதவியாக துணி வியாபாரம் செய்து வந்தார்.  அப்போது திருப்பூருக்கு சென்று துணி வாங்கி வர சென்றபோது, இவருக்கு திருப்பூரை சேர்ந்த கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஐந்து மாதத்திற்கு முன் பவித்ரா, கண்ணனை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பழந்தண்டலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா, மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில் பவித்ரா, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு இறந்தார். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 5 மாதங்கள் மட்டுமே ஆனதால்  ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. …

The post திருமணமாகி 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kundathur ,Bavitra ,Indira Nagar ,Kundarathur ,
× RELATED கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்...