×

நூல் வெளியிட்டு விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கீதா பிரபு. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு கவிதை மற்றும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர் கீதா பிரபு எழுதிய எல்லாம் சாத்தியமே, பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும், கூடடையும் பறவைகள் என 3 நூல்கள் வெளியீட்டு விழா கல்பாக்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு பேராசிரியர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி  தலைவர்கள் கலியபெருமாள், வாயலூர் கிங் உசேன், கவிஞர்கள் உதயா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய மறு சீரமைப்பு குழு இயக்குனர் அனந்தசிவன் புத்தகங்களை வெளியிட, சதுரங்கப்பட்டினம் தலைமையாசிரியர் கனகா கிருஷ்ண தாஸ் பெற்றுக் கொண்டார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

The post நூல் வெளியிட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Kita Prabhu ,Thirukkavulam Union Cherangapattinam Government Higher School ,Thread Publishing Ceremony ,
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது