×

காஞ்சிபுரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க விழிப்புணர்வு: அரசு ஊழியர்கள் உறுதிமொழி

காஞ்சிபுரம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்கும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று முதல் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு இருப்பின் ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு கூட்டுறவு அரங்கில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் அரசு ஊழியர்கள் நேற்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.இந்நிகழ்வுக்குப் பின் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் மஞ்சப்பை வழங்கி ஒரு மாத காலத்துக்குள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி அய்யங்கார்குளம் பள்ளிக்குச் சென்று அங்கும் பள்ளி மாணவ மாணவிகளிடையே பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிளாஸ்டிக் மூலம் நமக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்தும் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post காஞ்சிபுரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க விழிப்புணர்வு: அரசு ஊழியர்கள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Kanjipura ,Kanchipuram ,Tamil Nadu government ,Kanjipuram ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தில் 6 மாதங்களில் 8...