×

பாலிவுட்டில் குடியேறிய ராஷ்மிகா

மும்பை: கன்னடம் மற்றும் தெலுங்கை தொடர்ந்து ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த படம், ‘சுல்தான்’. இதையடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக அவர் நடித்து வெளியான ‘புஷ்பா’ என்ற பான் இந்தியா படம், அவருக்கு அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாகி இருக்கிறது. இதனால் அவர் ஐதராபாத்தை காலி செய்துவிட்டு, மும்பையில் சொந்த பங்களா வாங்கி குடியேறியுள்ளார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராஷ்மிகா, இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே அமிதாப் பச்சன் மகள் வேடத்தில் ‘குட் பை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், மூன்றாவது பாலிவுட் படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ என்ற படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது….

The post பாலிவுட்டில் குடியேறிய ராஷ்மிகா appeared first on Dinakaran.

Tags : Rashmika ,Bollyout ,Mumbai ,Karthi ,
× RELATED சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய...