×

மார்க் ஆண்டனி சில்க் சொன்ன சர்ப்ரைஸ்..!

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் வெற்றிபெற்றுள்ளது. இதில் ஒரு பாடலுக்கு சில்க் ஸ்மிதா ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்திருந்தவர், திருப்பதியைச் சேர்ந்த விஷ்ணுப்பிரியா என்ற மாடல். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவரது வீடியோ ஒன்றைப் பார்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், உடனே சில்க் ஸ்மிதா கான்செப்ட்டை உருவாக்கி விஷ்ணுப் பிரியாவை நடிக்க வைத்தார். சில்க் ஸ்மிதாவின் தோற்றத்தை மட்டும் விஷ்ணுப்பிரியா கொண்டிருக்கவில்லை.

வேறு சில ஒற்றுமைகளும் இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர், விஜயலட்சுமி. இவருடைய பெயர், விஷ்ணுப்பிரியா. சில்க் ஸ்மிதா இறந்தது 1996ல். விஷ்ணுப்பிரியா பிறந்தது 1997ல். சில்க் ஸ்மிதாவும், விஷ்ணுப்பிரியாவும் டிசம்பர் மாதத்தில் பிறந்துள்ளனர். ‘என்னைப் பார்த்த பலர், நான் சில்க் ஸ்மிதா என்று நம்பி ஏமாந்துள்ளனர். சிலர் பயந்து ஓடியுள்ளனர். என் கனவில் அடிக்கடி சில்க் ஸ்மிதா வருவார். ஏதாவது பேசுவார். அவரைப்போலவே நானும் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற ஆசைப்படுகிறேன்’ என்று விஷ்ணுப்பிரியா சொன்னார்.

The post மார்க் ஆண்டனி சில்க் சொன்ன சர்ப்ரைஸ்..! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mark Antony Silk ,Vishal ,SJ Surya ,Antony ,Silk Smitha ,Vishnupriya ,Tirupati ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்சார் போர்டு லஞ்சம் விஷாலிடம் சிபிஐ விசாரணை