×

பிரசவத்தில் இளம்பெண் பலி மயக்கவியல் டாக்டருக்கு ஓராண்டு சிகிச்சை அளிக்க தடை

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த விஷாக். இவரது மனைவி  கிருத்திகா (22). இவர், கடந்த 2020 ஜூலை 18ம் தேதி தலை பிரசவத்திற்காக ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கிருத்திகாவிற்கு அடுத்த நாள் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.  இவருக்கு இந்த மருத்துவமனையின் டாக்டர் சங்கீதா, மயக்கவியல் மருத்துவர் தங்கராஜ் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.அறுவை சிகிச்சை  முடிந்த சில நிமிடங்களில் கிருத்திகாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக பெருந்துறை ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் கிருத்திகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அன்றே உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவ சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஎம்எஸ்) விசாரணை நடத்தியது. கிருத்திகாவின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மனித  உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடத்திய விசாரணையில், டாக்டர் தங்கராஜ் நோயாளியை பராமரிப்பதில் தனது கடமைகளையும், முதுகுத்தண்டு மயக்கத்தால் தூண்டப்பட்ட ஹைப்போ-டென்ஷனை முன்கூட்டியே கண்டறிய தவறியதும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளியை மயக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு முன்பாகவே டாக்டர் சங்கீதா, மயக்க மருந்து டாக்டர் தங்கராஜின் பராமரிப்பில் விட்டு சென்றதால் கிருத்திகா பலியானது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ​​தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், டாக்டர் தங்கராஜ் முறையாக சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவரது பெயரை மருத்துவ பதிவேட்டில் இருந்து ஓராண்டு காலத்திற்கு நீக்கியும், ஓராண்டிற்கு டாக்டர் தங்கராஜ் மருத்துவம் செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டது. டாக்டர் சங்கீதா வரும் காலங்களில் இதுபோன்ற கவனக்குறைவாக இல்லாமல் எச்சரிக்கையுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது….

The post பிரசவத்தில் இளம்பெண் பலி மயக்கவியல் டாக்டருக்கு ஓராண்டு சிகிச்சை அளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Erode ,Vishak ,Krithika ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...