×

பழநி கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: வார விடுமுறையால் குவிந்தனர்

பழநி: வார விடுமுறை தினம் காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. அடிவார பகுதிகளான சன்னதி வீதி, கிரிவீதி, அய்யம்புள்ளி சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்த நிலையிலும் நேற்று தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர்.மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு சுமார் 4 மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. அன்னதான கூடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். பழநி பஸ் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் முண்டியடித்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி கோயிலில் தரிசனம் செய்தனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

The post பழநி கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: வார விடுமுறையால் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Palani temple ,Palani ,Phalani Daidhayadupani swami temple ,Dinakaran ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்