×

கோவில்பட்டி அருகே செல்போன் டவர் துணிகர கொள்ளை; 4 பேர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே செல்போன் டவரை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகள், லோடு ஆட்டோ மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம்-விளாத்திகுளம் சாலையில், கழுகாசலபுரம் கிராமத்தினை சேர்ந்த அழகிரிசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில், கடந்த 2008ம் ஆண்டு முதல் மாத வாடகையில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டு, இயங்கி வந்தது. அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் டவர் செயல்பாடு நிறுத்தப்பட்டு, மற்றொரு நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த செல்போன் டவரில் இருந்த பேட்டரி மற்றும் ஜெனரேட்டரில் உள்ள பாகங்கள், கேபிள் வயர்கள் அடிக்கடி திருடு போய் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஜாகீர் உசேன் என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று செல்போன் டவரில் சந்தேகப்படும் வகையில் சிலர் மேலே ஏறி நின்று பொருள்களை கழற்றி வாகனம் மூலம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் அழகிரிசாமி மகன் ஜெயராமன், அங்கிருந்தவர்களிடம் நீங்கள் யார்? ஏன் பொருட்களை கழற்றி எடுத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், ஜெயராமன், ஜாகீர் உசேனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்குள்ளாக அந்த கும்பல் செல்போன் டவரில் இருந்து கழட்டிய பொருள்களை தாங்கள் கொண்டு வந்த லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து ஜாகீர் உசேன் எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் சிந்தலக்கரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது, ஜமீன் இலந்தைகுளத்தினை சேர்ந்த மணிகண்டன் என்பதும். கழுகாசலபுரத்தில் செல்போன் டவரில் பொருள்களை திருடிய கும்பலில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் ெகாள்ளையில் ஈடுபட்ட மீனாட்சிபுரத்தை சேர்ந்த சசிக்குமார், பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை, சங்கரேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் செல்போன் டவரில் திருடப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், 2 பைக்குகள் மற்றும் 1 லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் சின்னத்துரை, சசிக்குமார் ஆகிய 2 பேரும் தான், இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் இவர்கள், தமிழகம் முழுவதும் செயல்படாமல் இருக்கும் செல்போன் டவர்களை கொள்ளையடிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் மட்டும் தான் ஈடுபட்டார்களா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போன் டவர் ஊழியர்செல்போன் டவர் கொள்ளை சம்பவத்தில் கைதாகியுள்ள சின்னத்துரை மீது ஏற்கனவே சென்னை ஆவடி பகுதியில் செல்போன் டவரில் பொருள்கள் திருடியது உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்றொரு நபரான சசிக்குமார் தனியார் செல்போன் டவர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது….

The post கோவில்பட்டி அருகே செல்போன் டவர் துணிகர கொள்ளை; 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Covilbatty ,Covilbity ,Covilbati ,Dinakaraan ,
× RELATED கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில்...