×

செக் மோசடி வழக்கில் பாலிவுட் இயக்குனருக்கு ஓராண்டு சிறை

மும்பை: செக் மோசடி வழக்கில் பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷிக்கு ராஜ்கோட் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி தனது தொழிலை மேம்படுத்துவதற்காக அனில் ஜெதானி என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதற்காக அவருக்கு மூன்று காசோலைகள் கொடுத்தார். அதன் மொத்த மதிப்பு ரூ.22.50 லட்சம். இந்த மூன்று காசோலைகளும் வங்கியில் கொடுத்த போது, ராஜ்குமார் சந்தோஷின் வங்கிக் கணக்கில் ​​பணம் இல்லாததால், காசோலைகள் ‘பவுன்ஸ்’ ஆனது. இதையடுத்து ராஜ்குமார் சந்தோஷி மீது தனது வழக்கறிஞர் மூலம் அனில் ஜெதானி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜ்கோட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதை விசாரித்த ராஜ்கோட் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் என்.எச்.வாஸ்வேலியா, குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் சந்தோஷிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வங்கியின் காசோலைகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, வங்கி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது….

The post செக் மோசடி வழக்கில் பாலிவுட் இயக்குனருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Mumbai ,Rajkot Court ,Rajkumar Santoshi ,Dinakaran ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...