×

நாட்டை அச்சுறுத்தும் வகையில் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது: தயாநிதி மாறன் விமர்சனம்..!

டெல்லி: குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா மக்கள் விரோதமானது என மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர்; டெல்லி: நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனை கைதிகளை விட 75% விசாரணைக் கைதிகளே அதிகமாக உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் லாக்-அப் மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்திய சிறைகளில் மொத்தம் 4,14,033 கைதிகளை அடைப்பதற்கே இடமுள்ளது. 4,14,033 பேரை மட்டுமே அடைக்கக் கூடிய இந்திய சிறைகளில் 20% அதிகமாக 4,88,511 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறையில் உள்ளவர்களில் 1,12,589 பேர் தான் தண்டனை கைதிகள்; 3,71,848 பேர் விசாரணை கைதிகள் தான். விசாரணை கைதிகளில் பலர் சில்லறை குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களாவர். விசாரணை கைதிகளில் பலர் தம் மீதான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் உள்ளனர். பல லட்சம் விசாரணை கைதிகள் சிறையில் வாடுவது பற்றி எல்லா உள்துறை அமைச்சருக்கு கவலை இல்லை. நீரவ் மோதி, லலித் மோதி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டோரை திரும்பக் கொண்டு வர ஒன்றிய அரசு என்ன சட்டங்களை வைத்துள்ளது?. புதிய மசோதாவால் 24 மணி நேரமும், 48 மணி நேரத்திற்குள்ளோ, 56 மணிக்குள்ளோ குற்றவாளிகளை பிடிப்போம் என்று கூற முடியுமா?. நாட்டை அச்சுறுத்தும் வகையில் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா மக்கள் விரோதமானது எனவும் விமர்சனம் செய்துள்ளார். …

The post நாட்டை அச்சுறுத்தும் வகையில் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது: தயாநிதி மாறன் விமர்சனம்..! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,GP ,Dayanidi ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...