×

10.5% இடஒதுக்கீடு பிரச்னைல அம்பலப்பட்டு போனதால பதற்றமான மாஜி விஐபிய பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒவ்வொரு சான்றுக்கும் ஒவ்வொரு ரேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் நன்னன் நகர் தாலுகா ஆபிசுல பட்டா பெயர் மாற்றம், திருத்தம், பெயர் நீக்கம், வாரிசு சான்று உட்பட பல்வேறு வகையான சான்றுகள் பெறமுடியாம தவிக்குறாங்களாம்.  புரோக்கருங்க கிட்ட, போய் சான்று கேட்டு விண்ணப்பிச்சா, உடனே கிடைக்குதாம். அதுக்கு காரணம், அந்த புரோக்கருங்க ஒவ்வொரு சான்றுக்கும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி வெச்சிருக்காங்களாம். இதுசம்மந்தமாக மாவட்ட அதிகாரிங்ககிட்ட ஜனங்க புகார் கொடுத்திருக்காங்க, ஆனா அங்கிருந்து, அந்த புகார் மனு மீண்டும் அதே இடத்திற்குத்தான் விசாரணை மனுவாக வருதாம். இதனால ஏழை ஜனங்க ரேட் ெகாடுக்காம, சான்று வாங்க முடியலைன்னு புலம்புற சத்தம் கொஞ்சம் அதிகமாவே கேட்கத்தொடங்கியிருக்குது. ஏழை மக்களுக்கு சான்றும் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பத்து ஆண்டு தொடர்ச்சியா ஆட்சியில  இருந்த இலைக்கட்சி சர்க்கார், வன்னியர்களின் கோரிக்கை எதுவுமே நிறைவேத்தல.  கடந்த சட்டமன்ற எெலக்சன் தேதி அறிவிக்கப்பட இருந்த நேரத்துல, அவசர அவசரமா  வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவிச்சாங்க. வடமாவட்டங்களில்  இருக்கும் வன்னிய மக்களின் ஓட்டுக்களை அப்படியே அள்ளிடலாமுன்னு திட்டம்  போட்டாங்க. ஆனா, அதுல முறையான தகவல்களை இடஒதுக்கீட்டுல தெரிவிக்காம  விட்டுட்டாங்க. இலைக்கட்சியின் தேனி மாஜி கூட, இது தேர்தலுக்கான  அறிவிப்பு தான், யாரும் கவலைப்பட வேண்டாமுன்னு அவரது ஆட்களை சமாதானம் செஞ்ச  சம்பவமும் நடந்துச்சு. ஆனா பாருங்க, பொதுசனம் ஆட்சி மாற்றத்தை கொண்டு  வந்துட்டாங்க.அதே நேரத்துல வன்னிய மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற  எண்ணத்துல, இலைக்கட்சி சர்க்கார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை, முழுமையா  அவங்களுக்கு கிடைக்க தமிழக அரசு  மூத்த சட்டநிபுணர்களை வைத்து  உச்சநீதிமன்றத்துல வாதிட்டது. ஆனா போதிய தகவல்கள் இல்லைன்னு வழக்கை  தள்ளுபடி செஞ்சுட்டாங்க. இந்த வழக்குல தமிழக அரசு கையாண்ட முயற்சியை,  மாம்பழ கட்சி தலைவர் கூட பாராட்டியிருக்காரு. ஆனா இலைக்கட்சி மாங்கனி  மாஜியோ, பதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறாராம். ஒழுங்கா அரசாணைய போடாதது அம்பலப்பட்டு போச்சேன்ற வெறுப்புதான் இந்த பதற்றத்துக்கு காரணமாம். மாங்கனி மாவட்டத்தில் பேட்டி  கொடுத்த மாஜி,  வேணுமுன்னே வழக்குல தமிழக அரசு முறையா மூத்த வக்கீலை வச்சி  வாதிடலன்னு உரத்த குரலில் பேசினாராம். மாம்பழ கட்சி நிறுவனரே சிறப்பா  ஆஜரானாங்கன்னு பட்டியல் போட்டு சொன்ன பிறகு கூட, கோயபல்ஸ் போல நம்ம தலைவரு  அள்ளிவிடுறாரே… இன்னுமா இவர நாடு நம்புதுன்னு சிரிச்சுகிட்டே போனாங்களாம்  ரத்தத்தின் ரத்தங்கள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொந்த கட்சிக்கு எதிராக செயல்படுறாராமே தாமரை கட்சி மாஜி மாவட்ட தலைவர்..’’‘‘மன்னர்  மாவட்டம் தாமரை கட்சியின் மாவட்ட தலைவராக இருந்த மன்னரானவர் சமீபத்தில்  அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டாராம்… அவருக்கு பதிலாக, மாவட்ட தலைவராக  செல்வமானவர் நியமிக்கப்பட்டுள்ளார்… பதவியில் இருந்து நீக்கப்பட்ட  மன்னரானவர் சொந்த கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறாராம்… மன்னர்  மாவட்டத்தில் தாமரை கட்சிக்கு ஆபீஸ் ஒன்று கட்டப்பட்டு வருகிறதாம்.. ஆனால்  கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெறவில்லை என மன்னரானவர் தரப்பினர் மாவட்டம்  முழுவதும் கிளப்பி விட்டார்களாம்…. இதனால் தாமரை கட்சியினர் கடும்  ஆப்செட்டில் உள்ளனர்… தற்போது தலைவராக உள்ள செல்வமானவருக்கு எதிரான  வேலையிலும் மன்னரானவர் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்…  இவர்களுக்குள் ஈகோவால் கட்சிக்குள்ளே இரண்டாக கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது.  இந்த கட்சியை நம்பி இருந்தால் நடுத்தெருவுக்குதான் வரவேண்டியதற்கும் என  ெதாண்டர்களுக்குள் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்… இந்த விவகாரம்  தற்போது தலைமைக்கு சென்றுள்ளதால் மன்னர் மாவட்டத்தில் விரைவில் தாமரை  கட்சியில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என சொந்த கட்சிக்குள்ளே அரசல் புரசலாக  பேசிக்கிறாங்களாம்’’’’  ‘‘கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி சப்ளை சம்பந்தமாக பிரச்னை வெடிச்சிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. கருப்பா, துர்நாற்றம் வீசற மாதிரி அரிசி சப்ளை செய்யறாங்க. இது வேண்டாம் என ரேஷன்  பணியாளர்கள் பிரச்னையை கிளப்புனாங்க. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.  கடைகளுக்கு அனுப்பிய அரிசி தரமாதான் இருந்தது என வாணிப கழகம் தகவல்  தெரிவித்தது. ஆனால் கூட்டுறவு சங்கத்தினர், நாங்க பொய் சொல்லல. நீங்க செக்  பண்ணி பாருங்க என பதில் தெரிவித்தனர். அப்போதும் வாணிப கழகத்தினர், நாங்க  டெல்டா மாவட்டங்கள்ல இருந்து தரம் பரிசோதனை செய்துதான் வாங்கி  அனுப்பியிருக்கிறோம். நீங்க அபாண்டமாக பழி போடாதீங்க என  கூட்டுறவுக்காரர்களிடம் சொல்லியிருக்காங்க. இரண்டு துறைகளிடம் விசாரித்த  மாவட்ட நிர்வாகம், அப்போ தரமில்லாத ரேஷன் அரிசி எங்கேயிருந்து வந்தது என  கேள்வி கேட்டது. தரமில்லாத அரிசி விவகாரத்தில் மேலும் புது பிரச்னை  கிளம்பியிருக்கு. உணவு கழகம் சப்ளை செய்த அரிசி டெல்டா அரிசியை விட நன்றாக  இருக்குது, எங்களுக்கு டெல்டா அரிசி வேண்டாம், உணவு கழக அரிசிதான் வேணும்  என ரேஷன் பணியாளர்கள் கேட்கிறார்களாம். டெல்டா, உணவு கழகம் அரிசி  விவகாரத்தில் ரேஷன் கடைகளில் பிரச்னை தொடர் கதை ஆயிருச்சாம். அரிசி மோசமாக  இருந்தா, கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் பைன் போடுவோம் என வழங்கல் பிரிவினர்  எச்சரித்துள்ளனர். இதனால் ரேஷன் பணியாளர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம்.  அரிசி அனுப்புறது நீங்க, அபராதம் எங்களுக்கா என கேள்வி கேட்டு  வர்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  …

The post 10.5% இடஒதுக்கீடு பிரச்னைல அம்பலப்பட்டு போனதால பதற்றமான மாஜி விஐபிய பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Peter Mama ,Grivalam district ,Nannan Nagar taluk ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...