×

காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி: மு.க.ஸ்டாலின் சொல்வதை எடப்பாடி செய்கிறார்

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பை வளாகம் அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை நடைபெற்றது. வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஷிப்பிங்  டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இந்த குப்பை கிடங்கால்   ஏராளமான பொதுமக்கள் பல நோய்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என  தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வந்தது. அப்போது கேட்காத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது திமுக தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார். எங்களை பொறுத்தவரையில் ஸ்டாலின் சொல்வதை தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார் என கூறினார்….

The post காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி: மு.க.ஸ்டாலின் சொல்வதை எடப்பாடி செய்கிறார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Analakiri ,G.K. Stalin ,Chennai ,Congress Party ,Chennai Kodungayur ,B.D. ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்