×

பைக் மீது லாரி மோதி பிடிஓ பரிதாப பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாத்திமேடு பிள்ளையார்பாளையம், சாலபோகம் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (41). ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை ஜானகிராமன், வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அரக்கோணம் – காஞ்சிபுரம் சாலை கம்மவார்பாளையம் சந்திப்பில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் படுகாயமடைந்தார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜானகிராமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பைக் மீது லாரி மோதி பிடிஓ பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : PTO ,Kanchipuram ,Janakiraman ,Chalapogam Street, Tathimedu Pilliyarpalayam, Kanchipuram ,Nemili, Ranipet district ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...