×

மாமனாருக்கு உருட்டுக்கட்டை அடி: மருமகன் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த மப்பேடு, பாத்திமாபுரத்தை சேர்ந்தவர் ராஜன் என்கின்ற படையப்பா (24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லியோ என்பவரது மகள்  மரிய சோனி (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஷ்யாம் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் குடி பழக்கம் கொண்ட ராஜன் சரி, வர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் தினமும் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மரிய சோனி தன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.  நேற்று முன்தினம் தன் மனைவியை அழைத்து வருவதற்காக ராஜன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மாமனார் லியோ தனது மகளை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜன் மாமனாரை தகாத வார்த்தையால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்படி போலீசார் . ராஜன் என்கிற படையப்பாவை கைது செய்தனர்….

The post மாமனாருக்கு உருட்டுக்கட்டை அடி: மருமகன் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Padayappa ,Rajan ,Pathimapuram, Mapedu ,Leo ,
× RELATED தடுப்பணை, குட்டையில் மூழ்கி வாலிபர்...