×

டீசல் விலையை குறைக்க கோரி ரிக் லாரி உரிமையாளர்கள் 3வது நாள் வேலை நிறுத்தம்

மதுரை: டீசல் மற்றும் உதிரிப்பாகங்களின் விலையை குறைக்கக்கோரி 3 நாட்களாக நடந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. டீசல் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை உயர்வால் போர்வெல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவர். டீசல் மற்றும் உதிரிப்பாகங்களின் விலையை குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் போர்வெல் உரிமையாளர்கள் கடந்த மார்ச் 31 முதல் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். இதன்படி, மார்ச் 31ல் மதுரையில் பாண்டி கோயில் அருகே, போர்வெல் ஊழியர்கள் மற்றும் ஏஜென்டுகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 3ம் நாட்கள் நடந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. 3ம் நாளான நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 46 போர்வெல் லாரிகள் பங்கேற்றன. இந்த போராட்டம் குறித்து மதுரை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறுகையில், ‘உக்ரைன்-ரஷ்யா போரை காரணம் காட்டி, போர்வெல்லுக்கான உதிரிப்பாகங்கள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டீசல் விலையில் இருந்து ரூ.10 வரை போர்வெல் கட்டணம் உயர்த்தப்படும். ஆனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, டீசல் விலையில் இருந்து ரூ.5 வரை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார். …

The post டீசல் விலையை குறைக்க கோரி ரிக் லாரி உரிமையாளர்கள் 3வது நாள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Borwell ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி