×

ஊத்துக்கோட்டை பகுதியில் 2.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வட்டம் வேளகாபுரம், மாம்பாக்கம், திருக்கண்டலம், கல்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு, ஏரி, ஆறு போன்ற பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 ஏக்கரில் பயிர் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த இடத்தை மீட்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.அதன்பேரில், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் நடராஜ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கல்பட்டு பகுதியில் 2 ஏக்கர், வேளகாபுரம் பகுதியில் 4.95 ஏக்கர், மாம்பாக்கம் பகுதியில் 7.5 சென்ட், திருக்கண்டலம் பகுதியில் 2.50 ஏக்கர் என 9.53 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ₹2.5 கோடி. தொடர்ந்து ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post ஊத்துக்கோட்டை பகுதியில் 2.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Oothukottai ,Oothukottai Circle Velakapuram ,Mambakkam ,Tirukandalam ,Kalpattu ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...