×

வாகன சோதனையில் 45 கிலோ கஞ்சா 1400 போதை மாத்திரை பறிமுதல்: 4 பேர் சிக்கினர்

திருப்போரூர்: தாழம்பூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 4 பைக்குகளை மறித்து விசாரித்தனர். ஆனால், அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் 4 பேரையும், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில் சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை கேபிகே நகரை சேர்ந்த   வெங்கடேசன் (26), துரைப்பாக்கம் பர்மா பஜார் புண்ணியமூர்த்தி (39), செங்கல்பட்டு கண்டிகை சிரில் (21), சென்னை பள்ளிக்கரணை அஜித்  (21) என தெரிந்தது. மேலும் விசாரணையில், கஞ்சா விற்பனை செய்து வரும் அவர்கள், போதை மருந்துகளை ஊசி மூலம் உடலில் ஏற்றி உச்சக்கட்ட போதையில் இருந்து வந்தது உள்பட பல திடுக்கிடும் தகவல்கள் கூறி, போலீசாரை அதிர்ச்சியடைய செய்தனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் (டைட்டால்), (நைட்ராவிட்) ஆகியவற்றை கூரியர் மூலம் சென்னை பெருங்குடியில் உள்ள வெங்கடேசன் வீட்டுக்கு வரவழைத்து, அதனை சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்கின்றனர். அதேபோல் ஆந்திராவுக்கு பைக்கில் சென்று போர்வையை, வியாபாரம் செய்வதற்காக எடுத்து வருவதுபோல துணிகளின் இடையே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர் என போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ₹12.5 லட்சத்தில் 45 கிலோ கஞ்சா, ₹4.5 லட்சத்தில் 10 சவரன் நகை, ₹5.20 லட்சம் டைட்டால் மாத்திரை, 800 நைட்ராவிட் மாத்திரை, ஊசி 100, 4 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான புண்ணியமூர்த்தி மீது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டை உடைத்து திருட்டு, பைக் திருட்டு உள்பட 75க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள், வெங்கடேசன் மீது 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள், சிரில், அஜித் ஆகியோர் மீது 4 பைக் திருட்டு, நகை பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்த ஆபரேஷன் கஞ்சா 2.0 யை தொடர்ந்து 45 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரைகள், திருடப்பட்ட பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த கேளம்பாக்கம் உதவி கமிஷனர் ரவிக்குமரன், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் வேலு, எஸ்ஐக்கள் முத்துகுமார், பார்த்திபன், தலைமை காவலர் சுதர்சன், காசிமுருகன், பிரேம் ஆனந்த் உள்பட தாழம்பூர் போலீசாரை தாம்பரம் ஆணையர் ரவி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.வியாபாரி கைது செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார், செங்கல்பட்டு அருகே தண்டுக்கரை பகுதியில் ரோந்து சென்றபோது, ஒருவர்  சந்தேகப்படும்படி நின்றிருந்தார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், தண்டுக்கரை ஆண்டாள் நகரை சேர்ந்த வின்சென்ட் (47). கஞ்சா வியாபாரி என தெரிந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …

The post வாகன சோதனையில் 45 கிலோ கஞ்சா 1400 போதை மாத்திரை பறிமுதல்: 4 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Thalampur ,Inspector ,Velu ,Nawalur Sungachavadi ,
× RELATED கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின்...