×

தேனி நில மோசடி வழக்கில் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை:  தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளரும், ஓபிஎஸ்சிற்கு மிக நெருக்கமானவருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அன்னபிரகாஷ் உட்பட சிலரை கைது செய்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அன்னபிரகாஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் சொந்தமான நிலத்தை கலெக்டர் அலுவலக விரிவாக்கத்திற்காக கடந்த 1997ல் ஆர்ஜிதம் செய்ததாகவும், இதற்காக எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை. இதனால் அரசிடம் மாற்றிடம் கேட்டு விண்ணப்பித்தேன். இதை ஏற்றே எனக்கு மாற்றிடம் வழங்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என அதில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் நேற்று விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்….

The post தேனி நில மோசடி வழக்கில் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Theni district ,Periyakulam ,Vadavieranayakanpatti ,Tomaraikulam ,Kenguarbati ,Dinakaran ,
× RELATED முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி...