×

2வது திருப்புதல் தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ்2 வேதியியல் வினாத்தாள்

* மாற்றிக்கொடுத்ததால் அதிர்ச்சி* கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைசேலம்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான 2வது திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று, சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதனிடையே, சேலம் ஊரக கல்வி மாவட்டத்திற்குட்பட்ட  கொண்டலாம்பட்டியில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கிருந்து 10 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி சமூக அறிவியல் பாட வினாத்தாள்கள், சுற்றியுள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 15 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள் மாறியிருந்தது. அதாவது, பத்தாம் வகுப்பு ஆங்கில வழி சமூக அறிவியல் வினாத்தாளுக்கு பதிலாக, பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் மாற்றி விநியோகம் ெசய்யப்பட்டது. இந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு, ஏற்கனவே மாணவர்களுக்கு நடத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, பத்தாம் வகுப்புக்குரிய வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டு, மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதுவரை, தமிழ்வழி மாணவர்களுக்கான வினாக்களை மொழிபெயர்த்து, ஆங்கில வழி மாணவர்கள் எழுதினர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘‘‘வினாத்தாள் கட்டுகளின் மேலே இருந்த கவர்கள் தவறுதலாக, மாற்றி ஒட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே நடந்த வேதியியல் வினாத்தாள் அதற்குள் இருந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ’’’ என்றனர். …

The post 2வது திருப்புதல் தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ்2 வேதியியல் வினாத்தாள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...