×

ஓடிடிக்கு வருகிறது துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா”

“கிங் ஆஃப் கொத்தா” ,செப்டம்பர் 29 முதல்,  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  ஸ்ட்ரீமிங் ஆகிறது, பரபரப்பான க்ரைம் டான் டிராமாவை இயக்குநர்  அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார் மற்றும் அபிலாஷ் N சந்திரன் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க,  பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபின் ஷாகிர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

“கிங் ஆஃப் கொத்தா” உலகில்  அடியெடுத்து வைக்கும்  ராஜு என்ற இளைஞனின் பயணமும்,  கேங்ஸ்டர் உலகில் அவன் ஏற்படுத்தும் மாற்றமும் தான் இந்தப்படத்தின் கதை.  ராஜுவின் பயணத்தில் அவன் வெகு சாதாரண மனிதனாக இருந்து அடிதடியில் அடியெடுத்து வைத்து, கேங்ஸ்டர் உலக தாதாவாக மாறும் அவனின் பரிணாம வளர்ச்சி தான் இப்படம். கோதா நகரில் அவன் அதிகாரத்தின் உச்சத்தை அடைய, தியாகங்களைச் செய்கிறான். வேஃபேரரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படம். இப்படம் செப்டம்பர் 29ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

The post ஓடிடிக்கு வருகிறது துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : OTD ,Tulkar Salmann ,Disney+ ,Dramah ,Abilash Joshi ,Abilash N Moon ,Tulkar Salman ,Aiswarya Lekshmi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன்