×

மணப்பாறை அருகே தள்ளுபடி கடனுக்கு நகைகளை வழங்க மறுப்பு; வங்கி ஊழியர்களிடம் 2 பயனாளிகள் வாக்குவாதம்

திருச்சி: மணப்பாறை அருகே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்ற பயனாளிகள்  இருவர் வங்கியில் திரும்ப நகை வழங்க மறுப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை  அடுத்த வளநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைகள் திரும்ப வழங்கபட்டு வருகிறது.பெரியருளப்பட்டிய சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு வாங்கி ஊழியர்கள் நகைகளை வழங்க மறுத்ததால் இரு தரப்பினர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து பெற்ற  ஊழியர்கள் சில காரணங்களை  கூறி நகைகளை மட்டும்  தர மறுப்பதாகவும் பாதிக்கபட்டவர்கள் கூறுகின்றனர்.  அங்கண்வாடியில் வேலை செய்யும் ஒருவரை அரசு பணி செய்பவர் என கூறி நகைகளை தர மறுப்பதாகவும்  கூறினார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து  தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்….

The post மணப்பாறை அருகே தள்ளுபடி கடனுக்கு நகைகளை வழங்க மறுப்பு; வங்கி ஊழியர்களிடம் 2 பயனாளிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Trichy ,Manparai ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு