×

திருவள்ளூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க அடிக்கடி பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். ஆனால்  ஆட்கள் கொண்டு பூச்சி மருந்து தெளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதுடன் காலவிரயமும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில், தலக்காஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி தயாநிதி என்பவர் ட்ரோன் இயந்திரத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளித்து வருவது பற்றி தெரிந்தது. அவர் கொடுத்த தகவல்படி, நெய்வேலி பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மோகன்ராஜ் என்ற இளைஞரை தொடர்புகொண்டு தலக்காஞ்சேரி பகுதிக்கு வரவழைத்து நெய் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர்.‘’பவர் ஸ்பிரே மூலம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்க முடியும் என்ற நிலையில், ட்ரோன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஏக்கர் வரை பூச்சி மருந்து தெளிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்து தேவை பாதியாக குறைகிறது. மேலும் செலவினம் குறைவு, எளிதாக கருவியை இயக்குவதோடு குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் மருந்து தெளிக்க முடிகிறது. எனவே, இந்த கருவியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    …

The post திருவள்ளூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...