×

சாலையில் சென்றவர்களை கத்தியால் வெட்டி செல்போன் பணம் பறித்த வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ் (28). ஸ்ரீபெரும்புதூர் செல்லபெருமாள் நகரில் தங்கி கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாதேஷ் செல்லப்பெருமாள் நகரில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, விலை உயர்ந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர், மாதேஷிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த 2 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாதேஷின் தலை மற்றும் கால்களில் வெட்டி விட்டு அவரிடமிருந்த செல்போன், ரூ.5000 ஆகியவற்றை பறித்துகொண்டு தப்பினர்.இதுபோல் ஸ்ரீபெரும்புதூர் அருகே செட்டிப்பேடு சாலை சந்திப்பில் நின்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநர் முகேஷ் (27) என்பவரையும் கத்தியால் வெட்டிவிட்டு உயரக செல்போனை பறித்து சென்றனர். 5 இடங்களில் ஒரே நாளில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னை மின்ட் பிரிட்ஜ் வரை பொருத்தப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ராகுல் (19), சூர்யா (20) என்பது தெரியவந்தது. கைது செய்த ராகுலிடமிருந்து செல்போன்கள், பணம், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

The post சாலையில் சென்றவர்களை கத்தியால் வெட்டி செல்போன் பணம் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Wolvier ,Sripurudur ,Madesh ,Darmapuri district ,Sriperudur ,Chellapurumal ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு