×

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர் மேடுபகுதியை சேர்ந்தசதிஷ் (எ) ஓட்ட சதீஷ் (23). பிரபல ரவுடி. இவர் மீது சிவகாஞ்சி உள்பட மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. வாலாஜாபாத் அருகே வாரணவாசி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (எ) பாபு. பிரபல ரவுடி இவர் மீது ஒரகடம் காவல் நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள், பல காவல் நிலையங்களில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி சுதாகர், கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மேற்கண்ட 2 பேரையும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்….

The post குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Satish (A) Ota Satish ,Kanchipuram Pallavar Uplands ,Sivakanji ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...