×

அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

திருப்போரூர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், பாமகவில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு, அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திருப்போரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் த.அருண்குமார் ஏற்பாட்டில் திருப்போரூர் மேற்கு ஒன்றிய பாமக இளைஞர் அணித் தலைவர் கண்ணதாசன், ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் பார்த்திபன், இளைஞர் அணி துணைச் செயலாளர் பூபாலன், இள்ளலூர் கிளை நிர்வாகி சேகர், மேற்கு ஒன்றிய தொழிற்சங்க தலைவர் சதீஷ்குமார், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலாஜி, காயார் ஊராட்சி பாமக நிர்வாகிகளாக இருந்த மனோகரன், பிரகாஷ், தட்சிணாமூர்த்தி, ரவி, மோகன், சந்துரு, கவியரசன், கார்த்திக், ராஜ்குமார், படூர் ஊராட்சி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் பாமகவில் இருந்து விலகி திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாம்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் த.அருண்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர். …

The post அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Minister ,T. Moe ,Tirupporur ,Andarasan ,Bamaga ,Bamaka ,Dinakaran ,
× RELATED 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு...