×

19வது ஓவரில் 25 ரன் கொடுத்தார் துபே லக்னோ த்ரில் வெற்றி

மும்பை: ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்தது. மும்பை போராபோர்ன் மைதானத்தில் ஐபில் போட்டியில் நேற்று சிஎஸ்கே-லக்னோ அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கே ஓபனரான கெய்க்வாட் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் மொயின் -ராபின் உத்தப்பா ஜோடி லக்னோ பவுலர்களின் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.ராபின் 5வது ஓவரில் டையின் 4 பவுண்டரி அடித்து அசத்தினார். அப்போது 6வது ஓவரை வீச வந்தார் குருணால், அந்த ஓவரை சந்தித்த மொயின் அலி 16 ரன்கள் அடித்து அசத்தினார்.இந்நிலையில் ராபின் உத்தப்பா 50 ரன்னை 25 பந்தில் அடித்தார். அவர் (27பந்து,  1 சிக்சர், 8 பவுண்டரி), பிஸ்னாய் பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார். இவர்கள் 84 ரன் எடுத்து வலுவான பார்ட்னர் ஷிப் அமைத்து தந்தனர். இதையடுத்து சிவம் துபே 49 ரன்(30 பந்து 2 சிக்சர், 5 பவுண்டரி) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு முன்னதாக மொயின் அலி 35 ரன் (2 சிக்சர், 4 பவுண்டரி) அடித்து போல்ட் ஆனார்.  ராயுடு 27 ரன்னில் (20 பந்து, 2 சிக்சர், 2 பவுண்டர்) ரவி பிஸ்னாய் பந்தில் போல்ட் ஆனார், கடைசி பந்தில் டோனி தன் பாணியில் பவுண்டரி அடித்தார். அவர், டோனி 16 ரன் (6 பந்து,1 சிக்சர், 2 பவுண்டரி ) அடித்தார். இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழந்து 210 ரன்கள் எடுத்து லக்னோவுக்கு 211 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில், ராகுல் 40 ரன், டிகாக் 61 ரன் எடுத்து நல்ல அடித்தளம் அளித்தனர். பின்னால் வந்த லெவிஸ் 55 ரன் (23 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி) அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவருக்கு துணையாக படோனி 19 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். சிஎஸ்கே அணியின் சிவம் துபே 19ம் ஓவரில் 2 வைட் உள்பட 25 ரன்களை வாரி வழங்கினார். இதனால், லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது. …

The post 19வது ஓவரில் 25 ரன் கொடுத்தார் துபே லக்னோ த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Dubai Lucknow ,Thrill ,Mumbai ,Lucknow ,CSK ,IPL ,Ibil ,Bourourne Ground, Mumbai ,Dubai Lucknow Thrill ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!