×

மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா!: சிறப்பு பூஜைகளுடன் முகூர்த்தக்கால் நட்டு விழா ஆரம்பம்..திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

மதுரை: மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தக்கால் நடத்தப்பட்டது. கள்ளழகர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 12ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. இதையொட்டி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் பல்வேறு பூஜைகளும் இன்று நடைபெற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா வரும் 16ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது. இதற்கான பந்தல் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இதனிடையே வரும் 5ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது. இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்ள இருப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. …

The post மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா!: சிறப்பு பூஜைகளுடன் முகூர்த்தக்கால் நட்டு விழா ஆரம்பம்..திரளான பக்தர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kallabhagar Temple Sitra Festival ,Madurai ,Muhurtakal Nutu Festival ,Kallujagar Temple Sitra Festival ,Kallukalakar Temple Sitra Festival ,Madura ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி