×

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சசிகலா 2 நாள் சுற்றுப்பயணம்

சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 11ம் தேதி (திங்கள்) காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் சசிகலா, காலை 8 மணிக்கு திருச்சி வருகிறார். அங்குள்ள உத்தமர் கோயிலில் சாமி கும்பிடுகிறார். பின்னர் திருவாசி, குணசீலம் கோயில்களில் சாமிதரிசனம் செய்கிறார். அதன்பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருங்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில், இடைப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில், சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி கோயிலில் சாமி தரிசனம் இரவு சேலம் மாமாங்கத்தில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.மறுநாள் 12ம்தேதி காலை 8 மணிக்கு தாரமங்கலத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சாமி கும்பிடுகிறார். பின்னர் இரவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.ஏற்பாடுகளை சேலம் புறநகர் மாவட்ட அதிமுக முன்னாள் மீனவர்அணி செயலாளர் எடப்பாடி சுரேஷ் செய்து வருகிறார். இதற்கிடையே சசிகலாவின் ஆன்மீக சுற்றுப்பயணம் குறித்த பட்டியல் அறிவிப்பு, அதிமுக பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம், தியாகராயநகர், சென்னை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சேலத்தில் சிலதினங்களுக்கு முன்பு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது நீக்கியதுதான், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என கூறினார். இந்நிலையில், சசிகலா எடப்பாடி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சசிகலா 2 நாள் சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Chasikala ,Salem, Namakal District ,Supreme Secretary General ,Salem ,Jayalalitha ,Salem district ,Chief Secretary General ,
× RELATED ஆசிய விளையாட்டு போட்டி; 83...