×

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: பெரிய, சிறிய தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர்

தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றது. நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சிறிய தேர் திருவீதி உலா துவங்கியது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சிறிய தேரை தலையிலும், தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் அருள் பாலித்தனர். தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலிலிருந்து தொடங்கிய தேர் வீதிஉலா கோட்டைமேடு வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்றது. தேரோட்டத்தையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது நாளாக இன்று மாலை 5 மணிக்கு தேர் பவனி  துவங்குகிறது. 2 தேர்களும் இன்று இரவு அல்லது நாளை கோயிலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: பெரிய, சிறிய தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர் appeared first on Dinakaran.

Tags : Chariot Festival ,Thaniyam Madurai Kaliamman Temple ,Tha.Pettai ,Tiruchi District ,Tankiyam Madurai Kaliamman Temple Panguni Chariot Festival ,Tankiyam Madurai Kaliamman Temple Kolakalam Chariot Festival ,Dinakaran ,
× RELATED கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன்...