×

துபாய், இலங்கைக்கு கடத்த முயன்ற ₹35 லட்சம் வெளிநாட்டு கரன்சி சிக்கியது

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 4 ஆண்கள் ஒரு குழுவாக துபாய்க்கு விமானத்தில் செல்ல வந்திருந்தனர். அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தபோது அவர்களின் உள்ளாடைகளுக்குள், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி உட்பட வெளிநாட்டு பணங்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். பிறகு 4 பேருடைய பயணத்தையும் சுங்க அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதுபோல், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த  25 வயது ஆண் பயணி ஒருவரை சோதித்தபோது அவருடைய உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவருடைய பயணத்தையும் ரத்து செய்து, அவரிடம் இருந்த வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.5 பேரிடம் இருந்து ₹35 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த 5 பேரும் ஒரே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. …

The post துபாய், இலங்கைக்கு கடத்த முயன்ற ₹35 லட்சம் வெளிநாட்டு கரன்சி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Sri Lanka ,Fisheramakkam ,Emirates Airlines ,Chennai ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்