×

பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிப்பு!

டெல்லி: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்’ விருதை அறிவித்தது ஒன்றிய அரசு. 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை வஹீதா ரஹ்மான் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமலின் தாயாக நடித்திருப்பார்.

சமீபத்தில், தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டிற்காகக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தாதா சகேப் பால்கே விருது பெற்ற நடிகர்கள், கே. பாலசந்தர்(2010), செளமித்ரா சாட்டர்ஜி(2011), குல்சார்(2013), ரஜினிகாந்த்(2021),ஆஷா பரோக்(2022), ரேகா(2023) ஆவர். இந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசு, 2023 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவித்துள்ளது.

தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

* வஹீதா ரஹ்மானின் வாழ்கை வரலாறு
வஹீதா ரெஹ்மான் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று பிறந்தவர். சினிமாவின் பொற்காலத்தின் மிக முன்னணி நடிகைகளில் ஒருவரான வஹீதா ரெஹ்மான் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

மருத்துவராக வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது, ஆனால் சூழ்நிலையாலும் உடல் நிலை சரியில்லாததாலும் அவர் இந்தக் குறிக்கோளைக் கைவிட்டார். அதற்குப் பதிலாக அவர் பரத நாட்டியத்தில் பயிற்சி பெற்று ஆதரவாக இருந்த பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டு தெலுங்கு திரைப்படமான ஜெய்சிம்மா (1955) பின்னர் தொடர்ந்து ரோஜுலு மராயி (1955) ஆகிய திரைப்படங்களின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். NTR நேஷனல் விருது2006 ஆம் ஆண்டிற்கானது. பத்ம ஸ்ரீ 1972 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

The post பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிப்பு! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Waheeda Rahman ,Delhi ,Waheeda Rehman ,Union Government ,Waheeda ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...