×

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்

ஐதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் 157வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் 157வது படத்தை பீம்பிஷரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது இதன் முதல் கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா ராய் மட்டுமல்லாமல் அனுஷ்காவும், மிருணாள் தாகூரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Syranjevi ,Siranjevi ,Aiswarya Rai ,mallidi wasishta ,U. CV Creations ,Siranjeevi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிரஞ்சீவிக்கு 126 அடி உயர கட்அவுட்