×
Saravana Stores

அக்.4ல் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்முலம் அஜித்துக்கு ஜோடியாக 5வது முறையாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். அஜித் ஓரிரு நாட்களில் துபாய் கிளம்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post அக்.4ல் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Abu Dhabi ,Ajith ,Lyca ,Mizh Thirumeni ,Anirudh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கார் ரேஸில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்