×

போடி அருகே யானை தாக்கி விவசாயி சாவு

போடி: போடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே சூரியநெல்லி மலைக்கிராமம் சிங்குகண்டத்தை சேர்ந்தவர் பாபு(70).  இவர் நேற்று அதிகாலை ஏல தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது காட்டுயானை, பாபுவை தாக்கி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாபு உயிரிழந்தார். பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றுவிட்டது.பாபுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சாந்தாம்பாறை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை மீட்டு அடிமாலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்….

The post போடி அருகே யானை தாக்கி விவசாயி சாவு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Singukandat, Suryanelli hill village ,Bodimetu, Theni district ,Dinakaran ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்