×
Saravana Stores

வைரலாகும் ராகவ் – பரினீதி Wedding க்ளிக்ஸ்!!

பரினீதி சோப்ரா, ராகவ் சத்தா இருவரும் லண்டனில் இணைந்து படித்தனர். அப்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள், பிறகு ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கத் தொடங்கினர். அப்போது வெளியான தகவல்களுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

இதனிடையே ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோரா, அந்த ஜோடியின் போட்டோக்களை கடந்த மார்ச் மாதம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதற்கு பிறகே பரினீதி சோப்ரா, ராகவ் சத்தாவின் காதல் உறுதி செய்யப்பட்டு, கடந்த மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இவர்களது திருமண கொண்டாட்டங்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடைபெற்றது. திருமண விழாவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட பரினீதி – ராகவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

The post வைரலாகும் ராகவ் – பரினீதி Wedding க்ளிக்ஸ்!! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Raghav ,Parineeti Chopra ,Raghav Chadha ,London ,Aam Aadmi ,Sanjeev Arora ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இருமொழிகளில் ராமம் ராகவம்