×

பங்குனி பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று பங்குனி பிரதோஷத்தையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். வனத்துறை கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டவுடன், பக்தர்கள் தரிசனத்திற்காக சென்றனர். பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அபிஷேகம் முடிந்ததும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர்.  நாளை பங்குனி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post பங்குனி பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Sadhuragiri ,Sadhuragiri Sunderamakalingam ,Madurai District, Chaptur ,Prathosha ,day ,Bankuni Pathosha ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கு...