×

மயிலாடுதுறை அருகே 1700 ஆலிவர் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே 1700 ஆலிவர் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் நேற்று விடப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் கடலில் அரிய வகை இனத்தை சேர்ந்த ஆலிவர் ரெட்லி ஆமைக்குஞ்சுகளை கலெக்டர் லலிதா முன்னிலையில் நேற்று விடப்பட்டன. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஆர்டிஓ நாராயணன், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து வனபாதுகாவலர் ஜோசப் டேனியல் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் சீர்காழி வனச்சரகத்தில் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 32,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டு 15,572 ஆமைக்குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இதேபோல் இன்று (நேற்று) 1700 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. கடலில் விடப்படும் ஆமை குஞ்சுகள் 8 வருடங்கள் கழித்து இதே கடற்கரை பகுதிக்கு இனப்பெருக்கத்திற்கு வரும். இதன் ஆயுள் காலம் 150 ஆண்டு முதல் 450 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.இது கடலின் அடியில் காணப்படும் தேவையில்லாத பாசி இனங்களை தின்று மீன்களின் பெருக்கத்திற்கு வழி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….

The post மயிலாடுதுறை அருகே 1700 ஆலிவர் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Mayeladuthuram ,Oliver Redley ,Redley ,Mayiladudwara ,Mayaladududwara district ,Kootham ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை கொள்ளிடம்...