×

ஓசூர் அருகே மத்தூரம்மா கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்-லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர் : கர்நாடக மாநிலம், உஸ்கூரில் மத்தூரம்மா கோயில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், 3 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஓசூர் அருகே, கர்நாடக மாநிலம் உஸ்கூர் பகுதியில் 300 ஆண்டு பழமையான மத்தூரம்மா கோயில் உள்ளது. இந்த கோயில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும் உள்ளது. பெங்களூரு மாநகரில் இன்றளவும் இந்த கோயிலில் தேர்த்திருவிழா பாரம்பரிய முறையில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோயிலில் நடப்பாண்டு தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் கிராமத்திற்கு ஒரு தேர் என சுமார் 20க்கும் மேற்பட்ட தேர்கள் 200 முதல் 250 அடி வரை கட்டப்பட்டு, முழுவதும் அலங்கரித்து பொதுமக்கள் இழுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். மேலும், இந்த தேர்கள் பக்தர்கள் மட்டுமின்றி எருதுகள் மூலமும் இழுக்கப்பட்டது. இந்த தேர் திருவிழாவில் 3 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 300 ஆண்டுக்கு முன்பு மத்தூரம்மா கோயிலுக்கு திப்பு சுல்தான் வழங்கிய நகைகள் இன்றளவும் ஆனேக்கல் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு, தேர்த்திருவிழாவில் அம்மனுக்கு அலங்கரித்து மீண்டும், கருவூலத்தில் ஒப்படைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்….

The post ஓசூர் அருகே மத்தூரம்மா கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்-லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Mathuramma Temple ,Therthiruvizha Kolakalam ,Hosur- Lakhs ,Swami Darshan ,Hosur: ,Mathuramma temple election festival ,Usur, Karnataka ,Swami ,
× RELATED திருமழிசை, திருவாலங்காடு, பொன்னேரி...