×

பாதாளச் சாக்கடை திட்டப்பணியால் ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பு-பள்ளத்தில் சிக்கிய பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிக்கு தோண்டும்போது குடிநீர் குழாய்களை உடைப்பதால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.ராஜபாளையம் நகரில் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடையாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. நகரின் முக்கியச் சாலையான மதுரை சாலை, தென்காசி சாலை பகுதிகளில், சாலையோரம் பாதாளச் சாக்கடை பணிகளுக்காக நேற்று அதிகாலை தோண்டினர். அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. இந்நிலையில், தனியார் பள்ளி பஸ் ஒன்று பாதாளச் சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. இதனால், நகரில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து நகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ‘பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் செய்யும் பணியாளர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் தோண்டி, ஆங்காங்கே குடிநீர் குழாய்களை சேதப்படுத்துகின்றனர். இதனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. சேதமடைந்த குடிநீர் குழாய்கள் வழியாக கழிவுநீர் மற்றும் தேங்கியிருக்கும் தண்ணீர் கலப்பதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை முறையாக செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பாதாளச் சாக்கடை திட்டப்பணியால் ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பு-பள்ளத்தில் சிக்கிய பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Passenger Sewer Scheme ,Rajapalaya ,Passenger Sewer ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து