×

பூங்கா நகரம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்கியுள்ள படம், ‘பூங்கா நகரம்’. சஸ்பென்ஸ்சுடன் கூடிய காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இதை அக்‌ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். ஹீரோவாக தமன் குமார், ஹீரோயினாக ஸ்வேதா டோரத்தி, முக்கிய வேடத்தில் பிளாக் பாண்டி நடித்துள்ளனர். பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய, ஹமரா சி.வி இசை அமைத்துள்ளார். நா.ராசா பாடல்கள் எழுதியுள்ளார். திருவண்ணாமலை பகுதியை கதைக்களமாக வைத்து உருவாகப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் கேஎஸ்.ரவிகுமார் வெளியிட்டார்.

The post பூங்கா நகரம் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,E. ,Venkateshi ,K.K. Murugan ,nataraj ,Daman Kumar ,Hero ,Sweta Torathi ,Heroine ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்லும்...