×

திமுக கவுன்சிலரின் கார், பைக் எரிப்பு: தேர்தல் முன்விரோதம் காரணமா?

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் திமுக ஊராட்சி ஒன்றிய ஒன்றாவது வார்டு உறுப்பினர் செல்வராஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் நள்ளிரவு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலுள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது கார், இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் கார், இருசக்கர வாகனம் ஆகியவை முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் தீயானது வீட்டின் ஒரு பகுதியில் பற்றி எரிய ஆரம்பித்தது. இதையடுத்து, உடனடியாக வீட்டின் ஓட்டை பிரித்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடலூரிலிருந்து நுண்ணறிவு போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக வாகனங்கள் எரிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். …

The post திமுக கவுன்சிலரின் கார், பைக் எரிப்பு: தேர்தல் முன்விரோதம் காரணமா? appeared first on Dinakaran.

Tags : Dijagam ,Cuddalore ,Dizhagam Padraksha Union ,Selvaraj ,Ringamadevi ,Chettiathopu ,Kanzagam ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது