×

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் திருமஞ்சன நிகழ்ச்சி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்ததும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்ய பெற்றதுமாக இக்கோயில் திகழ்கிறது. வெங்கடாசலபதி பெருமாள் திருவோண நட்சத்திரத்தில் இத்தலத்தில் அவதரித்த தினத்தையொட்டி பங்குனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை வெள்ளிப்பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவரான பொன்னப்பன், பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 8 மணிக்கு சப்தாவரணமும், நாளை (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 31ம் தேதி பகல் 12 மணிக்கு அன்னப்பெரும்படையல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது….

The post திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் திருமஞ்சன நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thirunageswaram ,Oppiliyappan temple ,Kumbakonam ,Oppiliyappan ,temple ,Tanjore district ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...